தப்லிகி தலைவர் மீதான வழக்கு டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Added : டிச 12, 2020
Share
Advertisement
புதுடில்லி:தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிற்கு எதிரான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றக்கோரிய மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியதும் மார்ச்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.வழக்குப் பதிவுஅதே மாதம் தப்லிகி- ஜமாத் அமைப்பின் மாநாடு டில்லியில் நடந்தது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு

புதுடில்லி:தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிற்கு எதிரான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றக்கோரிய மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி
செய்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியதும் மார்ச்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

வழக்குப் பதிவு

அதே மாதம் தப்லிகி- ஜமாத் அமைப்பின் மாநாடு டில்லியில் நடந்தது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த 9000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. வைரஸ் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக இந்த மாநாடு பார்க்கப் பட்டது.

இதையடுத்துதப்லிகி ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் மீது டில்லி போலீசார்
வழக்குப் பதிவு செய்தனர். இதை வைத்து இந்த அமைப்பின் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.இந்நிலையில் மவுலானா சாத் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் கணஷ்யாம் உபத்யாய் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சித்தார்த் மிருதுல்மற்றும் தல்வந்த் சிங்அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அனுமதி

அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யாஷ் சதுர்வேதி இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதால் இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்கக்கோரி
நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற
நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X