கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக அகழாய்வு இடங்களுக்கு அனுமதி எப்போது மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Added : டிச 12, 2020
Share
Advertisement
மதுரை:தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், சிவகளை, கொடுமணல் உட்பட பல இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறை அனுமதியளிப்பது எப்போது என்பதை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்ட சமணர் படுகை உள்ளிட்ட மாநிலத்தில் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க

மதுரை:தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், சிவகளை, கொடுமணல் உட்பட பல இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறை அனுமதியளிப்பது எப்போது என்பதை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்ட சமணர் படுகை உள்ளிட்ட மாநிலத்தில் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தொல்லியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: தொல்லியல் சின்னங்களை
பராமரிக்க 50 பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு டிச.,17 க்குள் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க பரிசீலிக்க வேண்டும்.உடையளூர் ஆய்வு குறித்து பாரதிதாசன் பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை யானைமலை
சமணர் படுகைக்கு செல்லும் வழியில் சிமென்ட்டினால் செய்த சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

பழமையான தொல்லியல் நினைவுச் சின்னத்தை மாற்றம் செய்யும் வகையில் அங்கு மத அடையாளங்களை நிறுவக்கூடாது. சிவலிங்கத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். தவறினால் மதுரை கலெக்டர், எஸ்.பி.,ஆஜராக வேண்டும். தஞ்சாவூர் தமிழ் பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் தொல்லியல் படிப்புகளை கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளதா, காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளன குறித்து பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆதிச்சநல்லுார், கீழடி, கொடுமணல், சிவகளை அகழாய்வு பொருட்கள் மாதிரியின் வயதை கண்டறிய அமெரிக்காவின் புளோரிடா பீட்டா ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறைக்கு
அனுமதியளிக்கப்படுகிறது. அது குறித்த திட்டம் எதுவும் இல்லையெனில் அகழாய்வு நடத்த மாநில தொல்லியல்துறைக்கு அனுமதியளிக்க வேண்டும்.

கீழடி, ஆதிச்சநல்லுார், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறையின் அனுமதியை மாநில
தொல்லியல்துறை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன் முடிவு மற்றும் 5 ஆண்டுகளில்
எத்தனை கல்வெட்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து மத்திய தொல்லியல்துறை டிச.,18ல் தெரிவிக்க வேண்டும்.

மகாபலிபுரத்தில் 2003-04ல் கடலுக்கடியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அலோக் திரிபாதி அகழாய்வு மேற்கொண்டார். இதன் முடிவு எப்போது வெளியிடப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

பூம்புகாரில் 1968ல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப்படி, அது கி.மு., 9ம் நுாற்றாண்டைச்
சேர்ந்தது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடல்சார் அறிவியல் மற்றும் கடல் புவிசார் தொழில் நுட்பத்துறைகள் உள்ளன. இவை குமரிக் கண்டம் தொடர்பாக கடல் அகழாய்வு மேற்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதா என்பதற்கு துவக்க கட்ட ஆய்வு செய்ய கட்டமைப்பு
வசதிகள் உள்ளதா என்பதை பல்கலை தெரிவிக்க வேண்டும்.

துவக்க கட்ட ஆய்விற்கு ஒரிசா பாலு மற்றும் காந்தி கிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமியின் சேவையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, திருச்சி பாரதிதாசன்
பல்கலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணை டிச.,18க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X