அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தும் அ.தி.மு.க., ஆட்சிதான் அமைச்சர் ராதாகிருஷ்ணன்

Added : டிச 12, 2020
Share
Advertisement
பழநி:'தமிழகத்தில் அடுத்தும் அ.தி.மு.க., ஆட்சியே நடைபெறும்' என்று கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.பழநியில் அவர் கூறியதாவது: ''தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிகளில் மூன்று கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி மையம் துவங்கப்பட உள்ளது. இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.தமிழக

பழநி:'தமிழகத்தில் அடுத்தும் அ.தி.மு.க., ஆட்சியே நடைபெறும்' என்று கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

பழநியில் அவர் கூறியதாவது: ''தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிகளில் மூன்று கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி மையம் துவங்கப்பட உள்ளது. இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.
தமிழக மக்களுக்கு தேவையானதை செய்யும் முதல்வரை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்களுக்கான முதல்வரான பழனிசாமி வெள்ளம், புயல் பாதித்த
பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகள் செய்கிறார். அதை பொறுக்க முடியாமல் அவதுாறு பரப்புகின்றனர்.

அ.தி.மு.க., 100 ஆண்டுகள் இருக்கும் கட்சி. அடுத்தும் அ.தி.மு.க., தலைமையிலான அரசுதான் அமையும். கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள், அரசு நிர்ணயித்த தொகையை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 10 லட்சம் 'செட் டாப் பாக்ஸ்'கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X