சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : டிச 12, 2020 | Added : டிச 12, 2020
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்போதை வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமின்போதைப் பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி ஜாமின் பெற்றார்.கர்நாடகா உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. கர்னூல் அருகே 686 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 686 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு
today, crimes, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்



போதை வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமின்

போதைப் பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி ஜாமின் பெற்றார்.கர்நாடகா உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

கர்னூல் அருகே 686 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 686 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 4.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது



தமிழக நிகழ்வுகள்



கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை க.க.சாவடி மற்றும் கோபாலபுரம் பகுதிகளில் உள்ள ஆர்டிஓ சுங்கச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ 87000 ஐ க.க. சாவடியிலும் ரூ ரூ 50,200 ஐ கோபாலபுரம் பகுதியிலும் பறிமுதல் செய்தனர்.
நகை கடைக்காரரிடம் 300 சவரன் வழிப்பறி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, கத்தியை காட்டி மிரட்டி, நகை கடை உரிமையாளரிடம் இருந்து, 300 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மான் வேட்டையாடியவர்கள் கைது

சென்னை அருகே, மான் வேட்டையாடிய நால்வரை, வனத்துறையினர் கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil news


பெண் தற்கொலை
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சுவேதா, 22. இவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா, 23, என்பவரை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருணம் செய்தார்.பிரசன்னா, மாமனார் கோவிந்தராஜன் வீட்டில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, வீட்டில் தனியாக இருந்த சுவேதா, துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார், உடலை மீட்டனர்.

டிவி நடிகை கணவரிடம் மூன்றாவது நாளாக போலீஸ் விசாரணை
சென்னை:'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவரிடம், மூன்றாவது நாளான நேற்று, போலீசார் விசாரணை நடத்தினர்.



9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X