அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் 'டுவிட்'

Added : டிச 12, 2020
Share
Advertisement
பழனிசாமி, தமிழக முதல்வர்: கோவை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு, மருத்துவ சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்கிய 'சாந்திகியர்ஸ்' உரிமையாளர் சுப்பிரமணியம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கோவை பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.ஸ்டாலின், தி.மு.க., தலைவர்: உழைப்பால் உயர்ந்து - பிறர் துயர் துடைத்த மாமனிதர் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

பழனிசாமி, தமிழக முதல்வர்: கோவை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு, மருத்துவ சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்கிய 'சாந்தி
கியர்ஸ்' உரிமையாளர் சுப்பிரமணியம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கோவை பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஸ்டாலின், தி.மு.க., தலைவர்: உழைப்பால் உயர்ந்து - பிறர் துயர் துடைத்த மாமனிதர் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். வலது கை கொடுப்பதை இடது கை அறியாத, விளம்பரம் தேடாமல் பசிப் பிணி போக்கிய நல் இதயம். பலரது வாழ்வில் ஒளியேற்றியவர். நம் உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பார்.

முருகன், தமிழக பா.ஜ., தலைவர் : புதிய வேளாண் சட்டம் மக்களிடம் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது. ஆகவே தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முழு
கடையடைப்பிற்கு விவசாயிகள் மத்தியில் எந்த ஒரு ஆதரவும் இல்லை.
கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர் : இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் சக்திதாசன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு வருத்தமும், துயரமும் அடைந்தேன். இவரது மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

வாசன், த.மா.கா., தலைவர்: டில்லியில் உள்ள பாரதியார் சிலையில் இருந்த கைத்தடியை
மீண்டும் வைக்க டில்லி துணை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X