பொது செய்தி

இந்தியா

மீண்டும் பப்ஜியை கொண்டு வர முயற்சி - குழந்தைகள் அமைப்பு எதிர்ப்பு

Updated : டிச 12, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புது டில்லி: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி எனும் வன்முறை விளையாட்டை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சீனா நாட்டு செயலிகளை தடை விதித்து வருகின்றது. அதில் பப்ஜி எனும் சீனா தொடர்புடைய விளையாட்டு செயலியும் அடக்கம். நாடு முழுவதும்

புது டில்லி: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி எனும் வன்முறை விளையாட்டை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news


மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சீனா நாட்டு செயலிகளை தடை விதித்து வருகின்றது. அதில் பப்ஜி எனும் சீனா தொடர்புடைய விளையாட்டு செயலியும் அடக்கம். நாடு முழுவதும் இளைஞர்கள், சிறுவர்களிடையே பிரபலமாக திகழ்ந்த ஆன்லைன் விளையாட்டு இது. போர்களத்தில் எதிரிகளை வீழ்த்துவது தான் விளையாட்டின் நோக்கம். ரத்தம் தெறிக்கும், குண்டுகள் வெடிக்கும் காட்சிகளுடன் மற்றொரு நபருடன் இணைய வழியில் பேசியபடியே இதனை விளையாடலாம்.

இந்த விளையாட்டிற்கு பலரும் அடிமையாகி உடல்நல பிரச்னைகளை சந்திப்பது செய்தியானது. பல மணி நேரம் இவ்விளையாட்டில் மூழ்கி பலர் இறந்த சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் தான் இச்செயலியை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் நிம்மதியடைந்தனர். தற்போது மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்கு என பிரத்யேகமாக தயாரித்து கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பான விவாதம் நடைபெற்றுள்ளது.


latest tamil news


அதில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ பங்கேற்றார். அவர் இது போன்ற விளையாட்டுக்களை ஆதரிக்க முடியாது என கூறியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பொருத்தமான சட்டங்கள் அமையும் வரை பப்ஜி போன்ற விளையாட்டுக்களை அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj - Chennai,இந்தியா
12-டிச-202020:57:36 IST Report Abuse
raj இன்றுள்ள செய்தியில் பப்ஜி விளையாட்டு மீண்டும் கொண்டு வர முயற்சி நடக்கிறது என்று. பப்ஜி இருந்த போது குழந்தைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்று செய்திகளில் வந்து கொண்டிருந்தது எல்லோரும் அறிவோம். நம் நெஞ்செல்லாம் பதைபதைத்ததே. இதற்கும் மக்கள், குழந்தை அமைப்பினர் போராடவேண்டுமா. சில நாட்களுக்கு முன் கஞ்சா மோசமானது அல்ல என்று நமது நாடு ஐ நா வில் வாக்களித்து இருக்கிறது. இது நம் பிரதமருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. தற்போது கஞ்சா எவ்வளவு பெரிய வில்லன் ஆக மாறியிருக்கிறது என்பது சாதாரண மக்களுக்கே தெரியும். இன்று இளைஞர்கள் குறிப்பாக மாணவ பருவத்தினர் அதனால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பெற்றோர்கள் எவ்வளவு மனவுளைச்சலில் இருக்கிறார்கள். எல்லா இடத்திலும் மறைத்து விற்கப்படுகிறது, அதை அரசாங்கம் சீரியஸ் ஆக நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இன்னும் தாராளமாக்கி இளைஞர்களை கெடுப்பதற்கு பப்ஜி கஞ்சா போன்றவற்றை நாளைய தலைமுறைக்கு கொடுத்தால் நாடு என்னாகும், இதை எல்லாம் பார்க்கும் போது ஆட்சியாளர்களின் குறிக்கோள் என்ன என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-டிச-202017:47:44 IST Report Abuse
J.Isaac இதற்கு மட்டும் கருத்து அதிகம் வராது.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-டிச-202017:10:58 IST Report Abuse
vnatarajan சுவையான பஜ்ஜி இருக்கும்போது உயிரை கொலும் பாப்ஜி எதற்கு. விட்டுவிடலாமீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X