பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் பிறந்த நாள் விழா

Added : டிச 12, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தாம்ப்ராஸ் சார்பில் சேதுபதி பள்ளியிலுள்ள சிலைக்கு மாவட்ட தலைவர் பக்தவத்சலம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் இல. அமுதன் முன்னிலையில் பள்ளி செயலாளர் பார்த்தசாரதி மாலையணிவித்தார். தலைமையாசிரியர் ரவி, நகர் கிளை தலைவர் கணபதி, செயலாளர் பாபு, எஸ்.எஸ்.காலனி நிர்வாகி சந்திரசேகர், நிர்வாகிகள் கண்ணன்,

மதுரை : மதுரையில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தாம்ப்ராஸ் சார்பில் சேதுபதி பள்ளியிலுள்ள சிலைக்கு மாவட்ட தலைவர் பக்தவத்சலம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் இல. அமுதன் முன்னிலையில் பள்ளி செயலாளர் பார்த்தசாரதி மாலையணிவித்தார்.

தலைமையாசிரியர் ரவி, நகர் கிளை தலைவர் கணபதி, செயலாளர் பாபு, எஸ்.எஸ்.காலனி நிர்வாகி சந்திரசேகர், நிர்வாகிகள் கண்ணன், சத்யமூர்த்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பாரதி யுவ கேந்திரா சார்பில் எம்.எல்.ஏ., சரவணன், போலீஸ் உதவி கமிஷனர் லில்லி கிரேஸ் மாலையணிவித்தனர்.தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சிலைக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் பள்ளி செயலாளர் பார்த்தசாரதி மாலை அணிவித்தார். பொதுச்செயலாளர் ரவி, பழங்காநத்தம் கிளை பொறுப்பாளர் சீனிவாசன், எல்லீஸ்நகர் சாம்பசிவம், மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீராம், இளைஞரணி செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம்ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் பாண்டியன் நகர் பூங்கா சிலைக்கு தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். நிர்வாகிகள் அண்ணாமலை, கணேசன், அரவிந்தன், திருநகர் வாசகர் வட்ட துணை தலைவர் பொன். மனோகரன் கலந்து கொண்டனர்.திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த குலபதி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர். உதவி பேராசிரியர் ராமர் வரவேற்றார். வரலாற்றுத் துறை மாணவர் திருலோகசந்தர் பேசினார். உதவி பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X