சுகாதார ஆய்வாளர் மீது வழக்குமதுரை: மாநகராட்சி 50வது வார்டு சுகாதார ஆய்வாளர் முருகன். இவர் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜெனிபர் அனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்குமதுரை: சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனி 15 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் நல உறுப்பினர் சண்முகம் புகாரில் சின்ராஜ் 21, உட்பட 5 பேர் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முதியவர் பலிவாடிப்பட்டி: தனிச்சியம் பிரிவில் ஓட்டல் வைத்துள்ள ராஜபாளையம் கோபால்சாமி 70, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மதுரை - திண்டுக்கல் நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி மோதி இறந்தார்.திருட்டில் ஒருவர் கைதுஅலங்காநல்லுார்: மதுரை புறநகர் பகுதிகளில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட மேலுார் பட்டணம் அருள்முருகன், 22 தேத்தாம்பட்டி 17 வயது சிறுவனை அலங்காநல்லுார் போலீசார் டிச.,7ல்கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 டூவீலர், 10 அலைபேசி என ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் தொடர்புடைய பட்டணம் பெரியசாமியை 22, போலீசார் கைது செய்து 2 டூவீலர், 2 அலைபேசியை பறிமுதல் செய்தனர்.ஆடு திருட்டுபேரையூர்: பொட்டிபுரம் கோவிந்தராஜ் 50. இவர் இதே ஊரில் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். நேற்று இவரது பண்ணையிலிருந்த 4 ஆடுகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE