போலீஸ் செய்திகள் ---| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் ---

Added : டிச 12, 2020
Share
சுகாதார ஆய்வாளர் மீது வழக்குமதுரை: மாநகராட்சி 50வது வார்டு சுகாதார ஆய்வாளர் முருகன். இவர் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜெனிபர் அனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்குமதுரை: சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனி 15 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் நல உறுப்பினர் சண்முகம்

சுகாதார ஆய்வாளர் மீது வழக்குமதுரை: மாநகராட்சி 50வது வார்டு சுகாதார ஆய்வாளர் முருகன். இவர் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜெனிபர் அனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்குமதுரை: சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனி 15 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் நல உறுப்பினர் சண்முகம் புகாரில் சின்ராஜ் 21, உட்பட 5 பேர் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதியவர் பலிவாடிப்பட்டி: தனிச்சியம் பிரிவில் ஓட்டல் வைத்துள்ள ராஜபாளையம் கோபால்சாமி 70, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மதுரை - திண்டுக்கல் நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி மோதி இறந்தார்.திருட்டில் ஒருவர் கைதுஅலங்காநல்லுார்: மதுரை புறநகர் பகுதிகளில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட மேலுார் பட்டணம் அருள்முருகன், 22 தேத்தாம்பட்டி 17 வயது சிறுவனை அலங்காநல்லுார் போலீசார் டிச.,7ல்கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 டூவீலர், 10 அலைபேசி என ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தொடர்புடைய பட்டணம் பெரியசாமியை 22, போலீசார் கைது செய்து 2 டூவீலர், 2 அலைபேசியை பறிமுதல் செய்தனர்.ஆடு திருட்டுபேரையூர்: பொட்டிபுரம் கோவிந்தராஜ் 50. இவர் இதே ஊரில் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். நேற்று இவரது பண்ணையிலிருந்த 4 ஆடுகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X