அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்

Added : டிச 12, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : ''மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்'' என்பதற்கு அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.திண்டுக்கல்லில் அ.தி.மு.க., நகர கிழக்கு மற்றும் தெற்கு பகுதி பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:அ.தி.மு.க., அரசு அனைவருக்கும் பல வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் ரேஷன் கார்டுகளுக்கு

திண்டுக்கல் : ''மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்'' என்பதற்கு அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.திண்டுக்கல்லில் அ.தி.மு.க., நகர கிழக்கு மற்றும் தெற்கு பகுதி பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:அ.தி.மு.க., அரசு அனைவருக்கும் பல வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கி உதவியது. உலகிலேயே 2ஜி போன்று விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வது தி.மு.க.,தான். அ.தி.மு.க., ஆலமரம் போன்றது. தி.மு.க., பனிமலை போல கரைந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல திட்டம் என்பதாலேயே முதல்வர் ஆதரிக்கிறார். அம்மா எட்டடி பாய்ந்தால், முதல்வர் பழனிசாமி 16அடி பாய்வது போல ஆட்சி செய்கிறார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோயிலில் வைக்கும் விபூதியை அழித்து விடுகிறார். அவரை முதல்வராக்க அவரது மனைவி கோயில் கோயிலாக சென்று வேண்டுகிறார்.

அவரது மகனோ ஆதினத்தை சந்திக்கிறார், என்றார்.பங்கேற்ற பிரமுகர்கள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், முரளிதரன், எம்.ஜி.ஆர்., அணி செயலாளர் வி.டி.ராஜன், மகளிரணி ஜெயலட்சுமி, இணைசெயலாளர் விஜயலட்சுமி, வர்த்தக அணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை செயலாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் சிவகுமார், இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் வேலவன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பழனிசாமி, தெற்கு பகுதி தலைவர் குலோதுங்கன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, வட்ட செயலாளர்கள் சேகர், விஜயகுமார், ரகுநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X