மாவட்டத்தில் சமீப காலமாக அலைபேசி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் அலைபேசி பறிப்பு, திருட்டு புகார்கள் அதிகம் பதிவாகின்றன.
ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நடந்து செல்வோரை குறிவைத்து செயல்படுகின்றனர். பைக்கில் வரும் இருவர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு, நடந்து செல்வோரின் அலைபேசியை பறித்துச் செல்கின்றனர். இவ்வகையில் ஒரே வாரத்தில் நகரில் மட்டும் 10 க்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரேநாளில் 3 புகார்கள்.மேலும் ஒரு நிமிடம் பேசிவிட்டு தருவதாக கூறி அலைபேசியுடன் தப்பி ஓடிவிடுவோரும் உள்ளனர். தொடர் புகார்களினால் இக்குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தும்படி எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிரைம் போலீசார் இதுவரை சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் 25 வயதிற்கும் குறைவானர்களே ஈடுபடுவதாக கூறுகின்றனர். இவர்கள் அலைபேசியை பறித்து, வெளியூர்களுக்கு தப்பிவிடுகின்றனர். அங்கு அவசர தேவை அல்லது பொருட்கள் வாங்கிவிட்டு பணத்தை மறந்துவிட்டேன் எனக்கூறி, அலைபேசியை விற்கின்றனர். சிலர் குறைந்த விலைக்கு விற்று செலவிடுகின்றனர். சிலர் மது, கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையாகி பணத்திற்காக செல்போன் திருடுவோரும் உள்ளனர். எனவே, போலீசார் இதற்காக குற்றசம்பங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிசிடிவி வைப்பது, ரோந்து செல்வது என தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE