குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் ராமகிரியில்கல்யாணநரசிங்க பெருமாள் கோயிலுக்கு ரூ.12 லட்சத்தில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்தாண்டுதிருப்பணிகள் நடத்தி புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.இக்கோயில்தேர் பழுதடைந்திருந்ததால் அதனை சரிசெய்யும் பணிகள் நடந்தன. இந்து அறநிலையத்துறைசார்பில் 4 சக்கரங்கள் மற்றும்அச்சுகள் ரூ.5 லட்சம் செலவில் இரும்பால்அமைக்கப்பட்டது. மேலும் ரூ.7 லட்சம்செலவில் தேர் பகுதி சரி செய்யப்பட்டுள்ளது. வண்ணத் துணிகள், பொருட்களால் அலங்கரித்தல், செட்அமைக்கும் பணிகள் பாக்கி உள்ளன.நேற்று தேருக்கு சக்கரம் பொருத்தும்பணிகள் பூஜையுடன் துவங்கின. திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன்,செயலாளர் ஜி.எஸ்.வீரப்பன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE