நியூயார்க்: 'தெற்காசிய நாடான ஆப்கனில், பயங்கரவாதம் மறைந்து, அமைதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்' என, ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா வழி மொழிந்த இந்த தீர்மானம், 130 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தீர்மானத்தை ஆதரித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி நாகராஜ் நாயுடு பேசியதாவது:ஆப்கனில், பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண, இந்த தீர்மானம் வகை செய்கிறது.

ஆப்கன் - இந்தியா இடையே சரக்கு போக்குவரத்துக்கு, செயற்கையாகவும், அரசியல் ரீதியிலும் தடைகள் உள்ளன. இந்த தடைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE