பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்

Added : டிச 12, 2020
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் சுவேதாராணி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., விஜயசந்திரிகா, ஏழுமலை, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கார்த்திகேயன் (தி.மு.க.,): அடுக்கம் ஊராட்சியில் தெருவிளக்கு எரிவதில்லை. பெருமாள்மலை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டியுள்ளது. வெள்ளகெவி கிராமத்திற்கு ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்பி.டி.ஓ., சம்மந்தப்பட்ட

கொடைக்கானல் : கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் சுவேதாராணி தலைமையில் நடந்தது.

பி.டி.ஓ., விஜயசந்திரிகா, ஏழுமலை, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கார்த்திகேயன் (தி.மு.க.,): அடுக்கம் ஊராட்சியில் தெருவிளக்கு எரிவதில்லை. பெருமாள்மலை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டியுள்ளது. வெள்ளகெவி கிராமத்திற்கு ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்பி.டி.ஓ., சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி தெரு விளக்கு எரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ரஞ்சித்குமார் (பா.ஜ.,): பூலத்துார் ஊராட்சியில் இலவச கறவை மாடு வழங்குவதில் முறைகேடு நடந்து வருகிறது. குடிநீர் பைப் லைன் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.தலைவர் (தி.மு.க.,): கறவை மாடு பிரச்னை சரிசெய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

ராமகிருஷ்ணன் (சுயே.): வில்பட்டி ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாழ்படுத்தும் அந்நிய மரங்களை அகற்ற வேண்டும். கால்நடை ஆஸ்பத்திரி பூட்டியுள்ளது.பி.டி.ஓ., குளத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழரசி (தி.மு.க.,): தாண்டிக்குடி ஊராட்சியில் குப்பை அள்ள போதுமான மஸ்துார் பணியாளர்களில்லை. தடியன்குடிசை நறுமண சுற்றுலா விடுதியை மேம்படுத்தி இணைய வழியில் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X