வடமதுரை : வடமதுரை பகுதிக்கான டவுன் பஸ் சேவை சில நாட்களாக காலை நேரத்தில் தாமதமாக இயக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டிருந்த பஸ் சேவை செப். 1 முதல் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு ஒரு டவுன் பஸ் அய்யலூருக்கு இயக்கப்பட்டது. காலை 6:00 மணிக்கு பணி துவங்கும் மில் தொழிலாளர்கள், காய்கறி வியாபாரிகள் பயனடைந்தனர்.இந்நிலையில் வடமதுரை பகுதிக்கான பஸ் சேவை கடந்த 10 நாட்களாக திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு தாமதமாக கிளம்புகிறது. இதனால் இந்த பஸ்சை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். அய்யலூருக்கு முதல் பஸ் சேவையை மீண்டும் காலை 5:00 மணிக்கே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE