பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை விவசாயிகளுக்கு பலன்

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை மாவட்டத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் தோட்டக்கலை விவசாயிகள் பலன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விவசாயிகள், உழவர் குழுக்களை சந்திப்பர். அவர்கள் விவசாயிகளின் வயல்களில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தி பயிற்சிகள் அளிப்பர். ஒவ்வொரு

திருப்பரங்குன்றம் : மதுரை மாவட்டத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் தோட்டக்கலை விவசாயிகள் பலன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விவசாயிகள், உழவர் குழுக்களை சந்திப்பர். அவர்கள் விவசாயிகளின் வயல்களில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தி பயிற்சிகள் அளிப்பர். ஒவ்வொரு கிராமத்திலும் 10 முன்னோடி விவசாயிகளை தேர்வு செய்து நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் அரசு மானியத்திட்டங்கள் குறித்த விளக்கம் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தோட்டக்கலை துறைக்கும் விவசாயிகளுக்கும் பாலமாக செயல்படுவார்கள்.

மாதந்தோறும் கிராம ஊராட்சி வாரியாக பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X