திண்டுக்கல் : 'சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் பங்கேற்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறை' குறித்து, திண்டுக்கல் எஸ்.பி.,ரவளிபிரியா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: டிச.13ம் தேதி 13 ஆயிரத்து 514 பேர் இரண்டாம் நிலைய காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடைகிறது. தேர்வு எழுதுவோர் காலை 9:00 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும். காலை 11:00 மணிக்கு மேல் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கறுப்பு அல்லது நீல பால்பாயின்ட் பேனா, நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு. அலைபேசி, ப்ளூடூத் உட்பட எந்தவித எலக்ட்ரானிக் பொருளையும் வளாகத்திற்குள் கொண்டு வரக்கூடாது, என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE