மதுரை : மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியில் பி.பி.ஏ., 2ம் ஆண்டு படிப்பவர் சுவேதா. அம்மா இறந்து விட, அப்பா ஆதரவின்றி தாத்தா பாலு பராமரிப்பில் இருக்கிறார்.
பாலு சிம்மக்கல்லில் ரோட்டோர இட்லி கடை நடத்தி பேத்தியை படிக்க வைத்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இட்லி வியாபாரம் நடக்காததால் கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் சுவேதா சிரமப்பட்டார். இதையறிந்த 1988 பேட்ச் போலீசார் இணைந்து கல்விக்கட்டணம் ரூ.12 ஆயிரத்தை துணைகமிஷனர் சிவபிரசாத் முன்னிலையில் சுவேதாவிடம் வழங்கினர். தொடர்ந்து படிக்க உதவுவதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE