மதுரை : மதுரை மாவட்டத்தில் நாளை(டிச.,13) காலை 11:00 மணி முதல் மதியம் 12:20 மணி வரை இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு 42 மையங்களில் நடக்கிறது.
31,760 ஆண்கள், 5790 பெண்கள் பங்கேற்கின்றனர். தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.ஹால் டிக்கெட், எழுது பொருட்கள் மட்டுமே எடுத்து வரவேண்டும். அலைபேசி, பை, புத்தகங்கள் மையத்திற்குள் எடுத்து வர அனுமதியில்லை என எஸ்.பி., சுஜீத்குமார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE