திருப்பூர்:மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் வரும் 19ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்காக, பொருட்கள் கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது.திருப்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் இதற்காக, 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 35 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் வரும், 19ல் நடக்கிறது. சென்னையிலிருந்து ஐகோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைக்கிறார். இதற்கான விழா தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது.புதிய வளாகம் திறப்பு விழாவுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில், தற்போதைய கோர்ட்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தளவாடங்கள் புதிய வளாகத்துக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. விசாரணையில் உள்ள வழக்கு உட்பட முக்கிய ஆவணங்கள், பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கப்படும், என கோர்ட் அலுவலர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE