திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழியை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 வரை நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிகால பூஜைகள் முடிந்து காலை 11:30 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7:45 மணிக்கு நடை சாத்தப்படும். டிச., 21ல் மாணிக்கவாசகர் காப்பு கட்டுதல், டிச.,25 வைகுண்ட ஏகாதசி, டிச.,26 சனி பெயர்ச்சி பூஜைகள், டிச., 29 மாணிக்கவாசகர் தேர், ராட்டின திருவிழா, டிச.,30 ஆருத்ரா தரிசனம், டிச., 31 எண்ணெய் காப்பு திருவிழா தொடங்கி ஜன.,4ல் நிறைவு பெறுகிறது. கொரோனா தடை உத்தரவால் திருவிழாக்கள் அனைத்தும் கோயிலுக்குள் நடத்தப்படும் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE