சென்னை: ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை எதிர்த்து, இந்திய மருத்துவ சங்கத்தினர், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில், அலோபதி மருத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை, இனி, ஆயுர்வேத டாக்டர்களும் மேற்கொள்ளலாம். அவசர கால சிகிச்சைஅவர்களுக்கும், எம்.எஸ்., பட்டம் வழங்கப்படும் என, ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள், ஒரே கலவையில் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும், இந்திய மருத்துவ சங்கத்தினர், சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பாதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா மற்றும் அவசர கால சிகிச்சையை டாக்டர்கள் தொடர்ந்தனர்.இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர், ஜனநாயக தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர், அரசு மருத்துவமனைகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

போராட்டம்
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தினர் கூறியதாவது:நவீன அலோபதி மருத்துவத்தையும், ஆயுர்வேத மருத்துவத்தையும் இணைக்க கூடாது. இது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தில் வலி நிவாரணி மருந்து இல்லாத நிலையில், எப்படி அவர்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அவர்கள் அறுவை சிகிச்சை செய்வதையும், நோயாளிகள் ஏற்க மாட்டார்கள். எனவே, ஒரே நாடு; ஒரே மருத்துவம் என்பதை, மத்திய அரசு கைவிட வேண்டும். அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து, தேசிய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE