அவிநாசி;'தெக்கலுார் ஊராட்சியில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருக்கிறது' என்ற புகார் எழுந்துள்ளது.நகர, ஊரக பகுதிகளில் நாளுக்கு, நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. அவிநாசி அருகேயுள்ள, தெக்கலுாரில் ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில், ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.கடந்த வாரம், டூவீலரில் வந்தவரை சூழ்ந்து விரட்டிய தெருநாய் கூட்டத்தால், நிலைக்குலைந்து கீழே விழுந்த அவர், இறந்தார் என, விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகிறார். இதனால், தெருநாய்கள் நிரம்ப உள்ள பகுதியை கடந்து செல்லும் மக்கள், உயிர்பயத்துடன் நடந்த செல்ல வேண்டியிருக்கிறது. 'தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.இதில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள் மூலம் தெருநாய்களை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நாய் பிடிக்க பிரத்யேக பயிற்சி அவசியம் என்ற நிலையில், உள்ளாட்சிகளின் துாய்மை பணியாளர்கள், அதற்கான பயிற்சியை பெறாததால், இந்த முயற்சி கைவிடப்பட்டது.தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியை மேற்கொள்ளும் தனியார் அமைப்பினர், மேட்டுப்பாளையத்தில் உள்ளனர். அவர்கள் மூலம் தெருநாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நிதி தேவை என்ற சூழலில், ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE