மூடப்படாத குழியால் பிரச்னை: அதிகாரிக்கு மக்கள் அர்ச்சனை

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருப்பூர்:நொச்சிபாளையம் அருகே, குழாய் பதிக்க தோண்டிய குழி மூடப்படாமல், குறுகிய ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில், நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் செல்லும் ரோடு உள்ளது. இதில் ஒரு பகுதி மாநகராட்சியிலும், ஒரு பகுதி கணபதிபாளையம் ஊராட்சியிலும் இணைந்துள்ளது.இந்த ரோட்டில், நான்காம் குடிநீர்
 மூடப்படாத குழியால் பிரச்னை: அதிகாரிக்கு மக்கள் அர்ச்சனை

திருப்பூர்:நொச்சிபாளையம் அருகே, குழாய் பதிக்க தோண்டிய குழி மூடப்படாமல், குறுகிய ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில், நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் செல்லும் ரோடு உள்ளது. இதில் ஒரு பகுதி மாநகராட்சியிலும், ஒரு பகுதி கணபதிபாளையம் ஊராட்சியிலும் இணைந்துள்ளது.இந்த ரோட்டில், நான்காம் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டோரம் ஏற்கனவே பிரதான குழாய் செல்லும் பகுதியில் அதையொட்டி குழாய் பதிக்கும்பணி நடக்கிறது. இதில், அந்த ரோட்டில் குறுகலாக உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டி நான்கு நாட்களாக குழாய் பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.அகற்றிய மண், ரோட்டில் கொட்டப்பட்டது. இதனால், வளைவாகவும் குறுகலாகவும் உள்ள ரோட்டில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் குழாய் பதிக்கப்பட்டது. இருப்பினும் ரோட்டில் கிடந்த மண் அகற்றி, குழி மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி தொடர்கதையாக உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:குழாய் பதிக்க குழி தோண்டிய போது அந்த இடத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்து, தொடர்ந்து புதிய குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழியை மூட பயன்படுத்தும் வாகனம் மற்றொரு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு பணி முடிந்த பின் உடனடியாக இது சரி செய்யப்படும். தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X