பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் விழிப்புணர்வு :கல்லூரி மாணவர் ஊர்வலம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
பல்லடம்:'ஒவ்வொரு வாக்காளரும் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றனர்,' என, பல்லடத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தில், பங்கேற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பல்லடம் அரசு கல்லுாரி மாணவ மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை, நகராட்சி கமிஷனர் கணேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை
 வாக்காளர் விழிப்புணர்வு :கல்லூரி மாணவர் ஊர்வலம்

பல்லடம்:'ஒவ்வொரு வாக்காளரும் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றனர்,' என, பல்லடத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தில், பங்கேற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பல்லடம் அரசு கல்லுாரி மாணவ மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை, நகராட்சி கமிஷனர் கணேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மயில்சாமி பேசுகையில், ''நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தேர்தல். நல்ல தலைவர்களை தேர்வு செய்வது வாக்காளர்களின் கடமை. தேர்தல்களின் போது ஓட்டுப்பதிவு செய்வது என்பது வாக்காளர்களாகிய நமது முதல் கடமை,'' என்றார்.தொடர்ந்து, நடந்த மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம், மங்கலம் ரோடு, திருச்சி ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு வழியாக பல்லடம் நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X