பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு அறைகளின் தரைகளுக்கு பொருத்தமான 'டைல்ஸ்'கற்கள்

Added : டிச 12, 2020
Share
Advertisement
வீட்டை கட்டி முடித்ததும் உள்ள கட்டுமான பணிகளில் தரைத்தளம் அமைப்பது ஒரு முக்கிய பணி. அறைகளின் தன்மை, பயன்பாட்டிற்கு ஏற்ப தரைகளில் டைல்ஸ் பதிக்கலாம். செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக், போர்சிலின் என பல வகை டைல்ஸ்கள் உள்ளன. போர்சிலின் டைல்ஸ் வீட்டு வரவேற்பு அறைக்கு உறுதியான, நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட டைல்ஸ் பதிப்பது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில்

வீட்டை கட்டி முடித்ததும் உள்ள கட்டுமான பணிகளில் தரைத்தளம் அமைப்பது ஒரு முக்கிய பணி. அறைகளின் தன்மை, பயன்பாட்டிற்கு ஏற்ப தரைகளில் டைல்ஸ் பதிக்கலாம். செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக், போர்சிலின் என பல வகை டைல்ஸ்கள் உள்ளன.

போர்சிலின் டைல்ஸ் வீட்டு வரவேற்பு அறைக்கு உறுதியான, நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட டைல்ஸ் பதிப்பது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் வரவேற்பு அறைக்கு போர்சிலின் வகை டைல்ஸ்களை பொருத்தலாம். இது செராமிக்கை விட விலை, தரம், தண்ணீர் குறைவாக உறிஞ்சுவதால் வழுக்கி விழ வாய்ப்பில்லை. குளியலறைக்கும் இதை பதிக்கலாம்.கிளாஸ் டைல்ஸ்இது ஈரம் உறிஞ்சாது என்பதால் குளியலறைக்கு பதிக்கலாம். சுத்தம் செய்வது எளிது. பலர் சமையல் அறைக்கு பயன்படுத்துவர். கிளாஸ் டைல்ஸில் விரும்பும் நிறத்தில் ஓவியங்களை உருவாக்கலாம்.

எனவே, சமையலறை, குளியலறையை அலங்கரிக்க கிளாஸ் டைல்ஸ் பதிக்கலாம். செராமிக் டைல்ஸ் செராமிக் டைல்ஸ் விலை குறைவானது. வீட்டின் அழகை மெருகேற்றும். போர்சிலின் டைல்ஸ் அளவு ஈரம் உறிஞ்சாது. இதை சமையல், குளியல், பூஜை அறை பக்கவாட்டு சுவர்களில் பதிக்கலாம். பட்ஜெட் வீடுகள் கட்டுபவர்கள் இது பொருத்தமாக இருக்கும்.நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ்வீட்டுக்குள், வெளி பகுதி, சுற்றுச்சுவரை ஒட்டிய நடை பாதை, தோட்ட வழித்தடம் ஆகியவற்றில் பதிக்கலாம். அதிக வெப்பம், பனி தாங்குவதால் ஆயுள் அதிகம். இயற்கையாக உருவாக்குவதால் உருவம், நிற ஒற்றுமை இருக்காது.

குளியலறைக்கு சொர சொரப்பாக மாற்றி பதிக்கலாம்.மொசைக்பூஜை அறையில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையலறை யில் இயற்கை காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல்ஸ் பயன்படுத்தலாம். மொசைக் டைல்ஸில் போட்டோ பிரின்ட் செய்த டிஜிட்டல் டைல்ஸ் வந்து விட்டது. குழந்தைகளின் போட்டோக்களை பிரின்ட் செய்து அவர்கள் அறை சுவர்களில் பதித்து அலங்கரிக்கலாம்.ஸ்டெய்ன் ப்ரீ டைல்இது சமையலறைக்கு பொருத்தமாக இருக்கும். காபி, எண்ணெய் சிந்தினாலும் சுத்தம் செய்து விடலாம். கீறல்களை தவிர்க்கும் ஸ்கிராப் பிரீ டைல்ஸ் ரகங்களும் சந்தையில் கிடைக்கின்றன. ஹாலில் அதிக எடையுள்ள சோபா போன்ற பொருட்களை நகர்த்தும் போது கீறல் விழாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X