கட்டடங்களில் ஈரம் கசிவதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விடும். குளியலறை, சன்சைடு, மாடிப்படி சுவர்கள், கான்கிரீட் கூரை, மாடி தண்ணீர் தொட்டி உள்ள இடங்களில் ஈரம் கசிவதை பார்க்கலாம்.கட்டுமானத்திற்கு சுட்ட செங்கல்மேற்கூரையில் கான்கிரீட் கலவை நிரப்பும் முன் மணலை சலித்து கலக்க வேண்டும்.
மணலில் உள்ள களி மண் கட்டிகள் கலவையுடன் சேர்ந்து கான்கிரீட் வழி ஈரத்தை கடத்தும். இதே போல கான்கிரீட் மேற்கூரை அமைத்த பின் மொட்டை மாடியில் தட்டோடுகள் பதிக்கலாம். தட்டோடுகள் தரமாக இல்லை என்றால் கான்கிரீட் வழி தண்ணீர் இறங்கும். குளியல் அறையில் சுவற்றுக்குள் பதித்த தண்ணீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அது சுவற்றில் இறங்கும். தரமில்லா செங்கல்களால் ஹால், சமையல், படுக்கை அறை சுவர்களில் ஈரம் கசியும். வீடு கட்டுமான பணிக்கு சுட்ட செங்கல் தான் பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகளில் ஈரம்செங்கல் பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரால் நனைத்து கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரமற்ற, பச்சை செங்கலாக இருந்தால் தண்ணீரிலேயே கரையும், எடை அதிகரிக்கும்.
மொட்டை மாடியில் இருந்து கசியும் ஈரம் கட்டடத்தின் மேற்கூரையை காலப்போக்கில் பாதிக்கும்.கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகளில் ஈரம் இறங்கினால் எளிதில் துருப்பிடிக்கும். நாளடைவில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும். குளியல் அறையில் நீர் கசிந்தால்பிளம்பர் மூலம் சரி செய்யலாம். பிற இடங்களில் நீர் கசிந்தால் அந்த பகுதியை உடைத்து பூச வேண்டும்.இதற்கு பொருட்ச் செலவு அதிகமாகும். கட்டுமான அழகையும் கெடுக்கும்.நீர் தடுப்பு சிமென்ட் கலவைமொட்டை மாடியில் கான்கிரீட் பரப்பி தட்டோடு பதிக்கும் முன் 20 மி. மீட்டர் கனமுள்ள நீர் தடுப்பு சிமென்ட் கலவை சந்து பூச வேண்டும்.
உட்புற கைப்பிடி சுவரிலும் மேற்பூச்சு பூசும் முன் பூசலாம். மாடிப்படிகள், கைப்பிடிசுவர் கான்கிரீட்டும் சேரும் இடம், தண்ணீர் தொட்டி கட்டும்இடம் நீர் தடுப்பு சிமென்ட் கலவையை பூசலாம்.சன்சைடு உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காதபடி வாட்டம் வைத்து கட்ட வேண்டும். நீர் கசிவை தடுக்கும் வேதி பொருட்களும் சந்தையில் கிடைக்கிறது. வேதி பொருட்களை சுண்ணாம்பு பூசுவதை போல சுவற்றில் பூசலாம். இது 5 ஆண்டுகளுக்கு தான் தீர்வு தரும்.எனவே கட்டடம் கட்டும் போதே நீர் கசியாத வகையில் கட்ட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE