சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிதீன் பைகள் பறிமுதல்: விற்றவர்களுக்கு அபராதம்

Added : டிச 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலீதின் கவர்கள், டம்ளர் மற்றும் தட்டுகள் ஆகியன பயன்படுத்தப்படுவது குறித்து நகராட்சி சுகாதார பிரிவினருக்கு புகார் வந்தது.இதனால், சுகாதார அலுவலர் செல்வராஜ் தலைமையில், சுகாதார ஊழியர்கள் நேற்று கடை வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எட்டு கடைகளில் ஏறத்தாழ, 60 கிலோ

திருப்பூர்:காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலீதின் கவர்கள், டம்ளர் மற்றும் தட்டுகள் ஆகியன பயன்படுத்தப்படுவது குறித்து நகராட்சி சுகாதார பிரிவினருக்கு புகார் வந்தது.இதனால், சுகாதார அலுவலர் செல்வராஜ் தலைமையில், சுகாதார ஊழியர்கள் நேற்று கடை வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எட்டு கடைகளில் ஏறத்தாழ, 60 கிலோ எடையுள்ள பாலிதீன் கவர், டம்ளர் மற்றும் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தடையை மீறி இவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் தேவிகா கூறுகையில், ''நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலீதின் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். தடையை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இவற்றைத் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-டிச-202007:21:52 IST Report Abuse
Mani . V சரி, விற்றவர்களுக்கு அபராதம். அதை தயாரிக்க அனுமதித்த ஊழல் அதிகாரிகளுக்கு, அதை தயாரித்த நிறுவனத்துக்கு என்ன தண்டனை? என்ன எழவு சட்டமையையா இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X