பொது செய்தி

தமிழ்நாடு

வெத்தலை... வெத்தலை... அருமை, பெருமை பற்றி தெரியுமா?

Added : டிச 12, 2020
Share
Advertisement
கோவில் மேடையில் கச்சேரி... கணீர் குரலில் பாகவதர் தொடங்கினார். எல்லோருக்கும் வணக்கம். இன்னைக்கு வெற்றிலை விவசாயம் பத்தி சொல்றேன். வெற்றிலைன்னு ஏன் பெயர் வந்தது தெரியுமா...மற்ற செடி, கொடிகள் வளர்ந்து பூ, பிஞ்சு, காய், கனி கொடுக்கும். ஆனால் இந்த கொடி வெறும் இலை மட்டும் தான் கொடுக்கும். அதனால் தான், வெற்று இலை தரும் கொடினு பெயர் வச்சாங்க.நாம அத வெற்றிலைனு சொல்றோம்.
 வெத்தலை... வெத்தலை...  அருமை, பெருமை பற்றி தெரியுமா?

கோவில் மேடையில் கச்சேரி... கணீர் குரலில் பாகவதர் தொடங்கினார். எல்லோருக்கும் வணக்கம். இன்னைக்கு வெற்றிலை விவசாயம் பத்தி சொல்றேன். வெற்றிலைன்னு ஏன் பெயர் வந்தது தெரியுமா...மற்ற செடி, கொடிகள் வளர்ந்து பூ, பிஞ்சு, காய், கனி கொடுக்கும். ஆனால் இந்த கொடி வெறும் இலை மட்டும் தான் கொடுக்கும். அதனால் தான், வெற்று இலை தரும் கொடினு பெயர் வச்சாங்க.நாம அத வெற்றிலைனு சொல்றோம். சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து தான் பேச்சு தொடங்குவது வழக்கம். இந்த கொடி வளர ஊன்றுகால்கள் நட்டுவைப்பாங்க. அந்த கால்களில் படர்ந்து வளருவதால, இது சாகுபடி செய்த இடம் 'கொடிக்கால்கள்' என சொல்றோம்.ஒரு வருடம் வளர்ந்து, பல வருடம் பலன் கொடுக்கும் இதில், பல வகை இருக்கு. நாமெல்லாம் சுவைப்பது சர்க்கரை கொடி வெற்றிலை. கற்பூர வெற்றிலை அப்படிங்கிறது மருத்துவத்திற்கு பயன்படுது.நம்ம பாரதியார் 'சிந்து நதியின்மிசை...' எனத் தொடங்கும் பாடலில், கங்கை நதிபகுதியில் விளையும் கோதுமை வாங்கிக்கொண்டு, அதற்கு ஈடாக காவிரிநதி கரையின் வெற்றிலையை பண்டமாற்றாக கொடுப்போம்னு... இதன் சிறப்பை சொல்றார்.கூட்டத்திலிருந்து ஒருவர், 'ஏங்க பாகவதரே காசு கொடுத்து வாங்க வேண்டியது தானே... அதென்ன பண்டமாற்று' என்றார். சகோதரா... 100 வருடங்களுக்கு முன் இந்த பாட்டு எழுதிய காலகட்டத்தில, ஒரு தானியத்தை கொடுத்து, அதற்கு இணையான விளைபொருட்களை பெறும் பண்டமாற்று தான் பல இடத்தில் இருந்தது. அதனால அவர் அப்படி எழுதியிருக்கார். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், மடத்துக் குளம் தாலுகா கணியூர், கடத்துார் அமராவதி கரையோரத்தில் வெற்றிலை சாகுபடி சிறப்பா இருந்துச்சு. வாரம் ஒரு முறை டன் கணக்கில் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், கால மாற்றத்தால, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய வெற்றிலையை இனம் தெரியாத நோய்கள் தாக்கத் தொடங்கிச்சு... அரசும் பெருசா உதவிக்கரம் நீட்டல. அதனால கொஞ்சம் கொஞ்சமா இந்த விவசாயம் அழியத் தொடங்கி இப்போ மிக குறுகிய இடத்தில் சில கொடிகால் மட்டுமே இருக்கு."ஏங்க பாகவதரே...இதை பத்தி அரசாங்கத்துக்கு தெரிவிச்சா நடவடிக்கை எடுப்பாங்களா?''''இது, வேளாண் துறை கவனத்துக்கு போகும். அவங்களும் நடவடிக்கை எடுப்பாங்க.''''பாகவதரே எல்லா விஷயமும் சொன்னீங்க... சின்ன டவுட்டு. வெத்தலை பச்சை கலர், பாக்கு பிரவுன் கலர், சுண்ணாம்பு வெள்ளை கலர். இத சேர்த்து மெல்லும்போது எப்படிங்க சிகப்பா மாறுது...''"சகோதரா... நீங்க கேட்ட கேள்விக்கு அடுத்த கச்சேரியில் பதில் சொல்றேன்...!''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X