பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளால் நாசமாகும் பயிர்களால் காடு வெளஞ்சும்... பலனில்லை!போராட்டம் நடத்தி ஓராண்டாகியும் மவுனம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
உடுமலை;உடுமலை பகுதியில், வனப்பகுதிகளிலிருந்து வெளியேறி, கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள், விவசாயப்பயிர்களை நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் நடத்தி ஓராண்டாகியும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, அமராவதி வனச்சரக எல்லை கிராமங்கள் மட்டுமன்றி, 40 கி.மீ., துாரம் வரை உள்ள, கிராமங்களிலும், ஓடைகள், புதர்களுக்குள்

உடுமலை;உடுமலை பகுதியில், வனப்பகுதிகளிலிருந்து வெளியேறி, கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள், விவசாயப்பயிர்களை நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் நடத்தி ஓராண்டாகியும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, அமராவதி வனச்சரக எல்லை கிராமங்கள் மட்டுமன்றி, 40 கி.மீ., துாரம் வரை உள்ள, கிராமங்களிலும், ஓடைகள், புதர்களுக்குள் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன.இரவு நேரங்களில், கூட்டம், கூட்டமாக, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. விவசாயிகள், நாய், மாடுகள் என உயிர்களுக்கும் அவை அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இனப்பெருக்கம் அதிகரித்து, நுாற்றுக்கணக்கான பன்றிகள் கிராமங்களிலுள்ள ஓடைகள், குளம், குட்டைகளில் முகாமிட்டு, பகல் நேரத்திலேயே, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் அவற்றை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கவும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடுமலை வனத்துறை அலுவலகம் முன், கடந்தாண்டு, டிச.,18ம் தேதி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், 'காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க அரசுக்கு பரிந்துரை செய்து, உடனடியாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்களுக்குள் புகும், காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு உரிமை உண்டு; மாவட்ட வன அலுவலர் உடனடியாக, விவசாயிகளை அழைத்துப்பேசி, இணக்கமான சூழலை உருவாக்கப்படும்,' என உறுதியளிக்கப்பட்டது.ஆனால், ஒரு ஆண்டாகியும், வனப்பகுதியிலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை, வளர்ந்து பரவியுள்ள காட்டுப்பன்றிகள் தொடர்ந்து சேதம் விளைவித்து வருகின்றன. வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாலும், கண்டு கொள்ளாததோடு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளும் வழங்குவதில்லை. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.விவசாயிகள் மனுஉடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர், உடுமலை கோட்டாட்சியர், வனத்துறை, வேளாண் துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள மனு: விவசாயத்தொழில் கடும் சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ளது; இந்நிலையில், காட்டுப்பன்றிகள், மயில் உள்ளிட்ட வன விலங்குகளால் கடும் சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்கிறது. தென்னை, மக்காச்சோளம், காய்கறி என எந்த சாகுபடியும் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. பயிர் சேதம் மட்டுமன்றி, விபத்து மற்றும் உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. எனவே, கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகளை பிடிக்கவும், விளைநிலங்களிலிருந்து விரட்ட நாய்களை அனுமதிக்க வேண்டும்.விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வருவதை தடுக்க, வன எல்லைகளில் வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X