பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், தரைமட்ட பாலம் அமைக்கும் பணி நடப்பதால், வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி நகரில் நெரிசலை கட்டுப்படுத்த, முக்கிய சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்ற நிலம் கையகப்படுத்த, 33.57 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டன.தற்போது, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, 34.51 கோடி ரூபாய் நிதி, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.அதில், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், 22 மீட்டர் அகலத்தில் தரைமட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மழைநீர் வடிகால் உயரமாக அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு இரு வழிச்சாலையாக உள்ளது. பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு பக்கமும்; பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் வழியாக பாலக்காடு, ஜமீன் ஊத்துக்குளி உள்ளிட்ட வாகனங்கள் மற்றொரு பக்கமாக சென்று வருகின்றன.இந்நிலையில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தரைமட்ட பாலம் கட்டும் பணி நடப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் ஒரு வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, போலீசார் இப்பகுதியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE