கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்து, அறிவுரை வழங்கினர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 237 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு, 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நேற்று தாமரைக்குளம், கோவில்பாளையம் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த, 14 பேரிடம் தலா, 200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், என, கடைக்காரர்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE