பல்லாங்குழியான பஸ் ஸ்டாண்ட்

Added : டிச 12, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் அமைத்து பல ஆண்டுகளான நிலையில், பராமரிக்கப்படாமல் உள்ளது.இதனால், வளாகம் முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பழநி, பொள்ளாச்சி, அமராவதி, திருப்பூர், வால்பாறை பஸ்கள் நிற்கும் பகுதிகளில் மிகப்பெரிய குழிகள் காணப்படுகின்றன. மழை
 பல்லாங்குழியான பஸ் ஸ்டாண்ட்

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் அமைத்து பல ஆண்டுகளான நிலையில், பராமரிக்கப்படாமல் உள்ளது.இதனால், வளாகம் முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பழநி, பொள்ளாச்சி, அமராவதி, திருப்பூர், வால்பாறை பஸ்கள் நிற்கும் பகுதிகளில் மிகப்பெரிய குழிகள் காணப்படுகின்றன. மழை காலங்களில், மழை நீர் வெளியேற வழியில்லாமல், பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது.பஸ்களுக்கு அவசரமாக ஓடும் பயணிகள், குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள கடைகளிலிருந்து, கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்து விடப்படுவதால், அங்குள்ள குழிகளில், கழிவு நீர் தேங்கி வருகிறது. பஸ்கள் செல்லும் போது, பயணிகள் மீது கழிவு நீர் தெறிக்கிறது. நகராட்சிக்கு பஸ்கள் நுழைவு கட்டணம், வணிக வளாக கடைகள் வருவாய் என பஸ் ஸ்டாண்ட் மூலம் ஏராளமான வருவாய் கிடைத்தும், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே, பஸ் ஸ்டாண்ட் குழிகளை உடனடியாக சரி செய்து, தளத்தை புதுப்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X