உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் தளம் அமைத்து பல ஆண்டுகளான நிலையில், பராமரிக்கப்படாமல் உள்ளது.இதனால், வளாகம் முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பழநி, பொள்ளாச்சி, அமராவதி, திருப்பூர், வால்பாறை பஸ்கள் நிற்கும் பகுதிகளில் மிகப்பெரிய குழிகள் காணப்படுகின்றன. மழை காலங்களில், மழை நீர் வெளியேற வழியில்லாமல், பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது.பஸ்களுக்கு அவசரமாக ஓடும் பயணிகள், குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள கடைகளிலிருந்து, கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்து விடப்படுவதால், அங்குள்ள குழிகளில், கழிவு நீர் தேங்கி வருகிறது. பஸ்கள் செல்லும் போது, பயணிகள் மீது கழிவு நீர் தெறிக்கிறது. நகராட்சிக்கு பஸ்கள் நுழைவு கட்டணம், வணிக வளாக கடைகள் வருவாய் என பஸ் ஸ்டாண்ட் மூலம் ஏராளமான வருவாய் கிடைத்தும், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே, பஸ் ஸ்டாண்ட் குழிகளை உடனடியாக சரி செய்து, தளத்தை புதுப்பிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE