பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நுாலகர் கணேசன் தலைமை வகித்தார். நுாலகர் மகேந்திரன் வரவேற்றார். நுாலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் சிவக்குமார், ஆலோசகர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாரிமுத்து, பாரதியார் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி
பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நுாலகர் கணேசன் தலைமை வகித்தார். நுாலகர் மகேந்திரன் வரவேற்றார். நுாலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் சிவக்குமார், ஆலோசகர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாரிமுத்து, பாரதியார் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார். தொடர்ந்து பாரதியார் கவிதைகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் நடந்தது. பள்ளி மாணவர்கள், நுாலக வாசகர் வட்டத்தினர், மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி பெறுவோர் பங்கேற்றனர். நுாலகர் பிரமோத் நன்றி கூறினார்.பொள்ளாச்சிபொள்ளாச்சி பூசாரிபட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், பாரதியார் பிறந்தநாள் விழா, இணைய வழியாக கொண்டாடப்பட்டது. கணினி அறிவியல் துறை மாணவி தீபா வரவேற்றார்.ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் செயலர் அருள்மொழி தலைமை வகித்ததுடன், 'இன்றைய இளைஞர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது படிப்பே, பண்பாடே' என்ற தலைப்பில் பட்டிமன்றத்தின் நடுவராகவும் இருந்தார். நிர்வாக அறங்காவலர் சிவஞானம் பேசினார்.பாரதியை நினைவு கூரும் வகையில், இளங்கலை மாணவர்களின் பேச்சு, பாட்டு, கவிதை, பாரதியார் ஓவியம் வரைதல் உட்பட, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கணினி அறிவியல் துறை மாணவி பாரதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் சண்முகபிரியா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர் - நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X