பொள்ளாச்சி:'பொங்கலுக்கு முன், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் புதுப்பிக்கப்படும்,' என, துணை சபாநாயகர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகரம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது.மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும். நல்லாட்சியை கொடுத்து வருவதால் எதிர்கட்சிகளுக்கு குறை சொல்ல எதுவும் இல்லை. தி.மு.க.,வின் அராஜக ஆட்சி மீண்டும் வராது. அ.தி.மு.க., ஆட்சி தொடர அனைவரும் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். பொள்ளாச்சியில் ரோடுகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டும் பணி, புறவழிச்சாலைகள், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் என பல வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொங்கலுக்கு முன், பொள்ளாச்சியில் உள்ள ரோடுகள் முழுவதும் புதுப்பிக்கப்படும். வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில், முகவர்கள் தவறாமல் பங்கேற்று புதிய வாக்காளர்களை சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE