பொது செய்தி

தமிழ்நாடு

பட்டியலில் பெயர் சேர்க்க மறந்துடாதீங்க... இன்றும், நாளையும் நடக்குது சிறப்பு முகாம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
சூலுார்;வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம், முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்தியது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள்,

சூலுார்;வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம், முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்தியது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஆய்வுக்கு பின் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடந்தன.இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், இன்றும், நாளையும் மாவட்டம் முழுக்க நடக்கிறது. புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான விண்ணப்பங்கள் முகாமில் பெறப்படும்.சூலுார் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மெர்சி கூறியதாவது: புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி சான்றுகளாக ஆதார், ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் நகல்களில் ஏதேனும் ஒன்றையும், வயது சான்றுக்காக, பிறப்பு சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து, படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். சூலுார் தொகுதியில், 120 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.* அன்னுார் தாலுகாவில், அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் ஒன்றியத்தில், 117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் 51 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. முகாம் நடக்கும் நாளில், இந்த ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன் சென்று, சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.''அனைத்து வேலை நாட்களிலும், அன்னுார் தாலுகா அலுவலகத்தில் இப்பணி நடக்கிறது. ஆன்லைன் முறையிலும், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், மாற்றம் செய்து கொள்ளலாம்'' என, அன்னுார் தாசில்தார் சந்திரா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X