பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே பன்னிமடையில், யானைகளால் வாழைகள் சேதமாகின.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது, ஆனைகட்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், கோவனுார் உட்பட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் நடமாடி வருகின்றன.நேற்று அதிகாலை, துடியலுார் அருகே பன்னிமடையில், ராஜகோபாலுக்கு சொந்தமான தோட்டத்துக்குள் நுழைந்த ஆறு யானைகள், குலைகளுடன் இருந்த வாழைகளை சேதப்படுத்தின. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலையில், யானைகள், மலையடிவாரம் சென்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE