அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூலுாரில் சுற்றுப்பயணம் தி.மு.க., எம்.பி.,யிடம் மனு

Added : டிச 12, 2020
Share
Advertisement
கருமத்தம்பட்டி:சூலுார் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க., எம்.பி. கனிமொழியிடம், பலர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.தி.மு.க., எம்.பி., கனிமொழி, நேற்று முன்தினம் சுல்தான்பேட்டை, சூலுார் கருமத்தம்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதில், சோமனுார் பஸ் ஸ்டாண்ட் இடிந்து விழுந்த சம்பவத்தில், ஒரு கால் இழந்த கல்லுாரி மாணவி லதா கோரிக்கை மனு அளித்தார். அதில், 'பஸ்

கருமத்தம்பட்டி:சூலுார் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க., எம்.பி. கனிமொழியிடம், பலர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.தி.மு.க., எம்.பி., கனிமொழி, நேற்று முன்தினம் சுல்தான்பேட்டை, சூலுார் கருமத்தம்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதில், சோமனுார் பஸ் ஸ்டாண்ட் இடிந்து விழுந்த சம்பவத்தில், ஒரு கால் இழந்த கல்லுாரி மாணவி லதா கோரிக்கை மனு அளித்தார். அதில், 'பஸ் ஸ்டாண்ட் இடிந்து விழுந்ததில், எனது இடது காலை இழந்தேன். அரசு வேலை கேட்டு மனு அளித்தேன். எவ்வித பதிலும் இல்லை. விசாரணை அறிக்கை மூன்று ஆண்டுகளாகியும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, முறையிட்டும் பலனில்லை. எனது வாழ்வாதாரத்துக்கு உதவ, அரசு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார். அதேபோல், தமிழ்நாடு நெசவுதறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், நெசவு தறிக்காரர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X