பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு: மாணவியர் ஆட்டோ பேரணி

Added : டிச 12, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னூரில் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி என்.சி.சி., சார்பில், துாய்மை பாரதம் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக,'கோவிட்--19, துப்புரவு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை,' என்ற தலைப்பில் தெருமுனை நாடகம் மற்றும் ஆட்டோ பேரணி நடந்தது. பேரணியை ஏ.டி.எஸ்.பி., சங்கு துவக்கி வைத்தார்.மவுண்ட் ரோடு, மருத்துவமனை சாலை சந்திப்பு கூட்டுறவு வங்கி உள்ளிட்ட, 4 இடங்களில் தெருமுனை
 கொரோனா விழிப்புணர்வு:  மாணவியர் ஆட்டோ பேரணி

குன்னுார்:குன்னூரில் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி என்.சி.சி., சார்பில், துாய்மை பாரதம் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக,'கோவிட்--19, துப்புரவு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை,' என்ற தலைப்பில் தெருமுனை நாடகம் மற்றும் ஆட்டோ பேரணி நடந்தது. பேரணியை ஏ.டி.எஸ்.பி., சங்கு துவக்கி வைத்தார்.மவுண்ட் ரோடு, மருத்துவமனை சாலை சந்திப்பு கூட்டுறவு வங்கி உள்ளிட்ட, 4 இடங்களில் தெருமுனை நாடகங்கள் நடந்தன. அதில், 'கட்டாயம் முகக் கவசம் அணிதல், சுற்றுச்சூழல் தூய்மை, சுகாதார பாதுகாப்பு, சமூக இடைவெளி, காற்றோட்டத்தின் அவசியம்' உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி ரமேஷ் தலைமையில், மருத்துவமனை செவிலியர்களுடன் இணைந்து நாடகம் நடத்தப்பட்டது. தேசிய மாணவர் படை அதிகாரி சிந்தியா ஜார்ஜ் மற்றும் என்.சி.சி., மாணவியர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X