தண்ணீர் இருந்தும் தாகம் தீரல... குடத்துடன் அலையும் பழங்குடிகள்

Added : டிச 12, 2020
Share
Advertisement
பந்தலுார்;பந்தலுார் அருகே, கூவமூலா பழங்குடியின கிராமத்தில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் முறையான 'சப்ளை' இல்லாததால் மக்கள், குடிநீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர்.நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூவமூலா பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 100- குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனை ஒட்டி சதுப்பு நிலப் பகுதியும் முக்கிய நீர் ஆதாரங்களும்
 தண்ணீர் இருந்தும் தாகம் தீரல... குடத்துடன் அலையும் பழங்குடிகள்

பந்தலுார்;பந்தலுார் அருகே, கூவமூலா பழங்குடியின கிராமத்தில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் முறையான 'சப்ளை' இல்லாததால் மக்கள், குடிநீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர்.நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூவமூலா பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 100- குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனை ஒட்டி சதுப்பு நிலப் பகுதியும் முக்கிய நீர் ஆதாரங்களும் அமைந்துள்ளன. அத்துடன் கபினி அணையின் முக்கிய கிளை நதியான பொன்னானி ஆறு இங்குதான் உற்பத்தி ஆகிறது. மக்கள் பயன்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட கிணற்றில் போதியளவு தண்ணீர் இருந்தும் மின் இணைப்பு இல்லாததால், டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த பல மாதங்களாக இந்த மோட்டார் பழுது அடைந்த நிலையில் தண்ணீர் வினியோகம் முழுமையாக தடை பட்டு, தற்போது மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.யானை மற்றும் புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் இப்பகுதியில் நடமாடி வரும் நிலையில், மாலை நேரங்களில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள், மாலை மற்றும் இரவில், தண்ணீர் சுமந்து வரும் போது வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை, நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை.மக்கள் கூறுகையில்,'பல கிராமங்களுக்கு குடிநீராக பயன்படும் பொன்னானி ஆறு இங்கு உற்பத்தியாகியும் எவ்வித பயனும் இல்லை. கிராமத்தை சுற்றி தண்ணீர் தேக்கங்கள் இருந்தும், மோட்டார் பழுதால் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X