கூடலுார்:முதுமலை, மசினகுடி செம்மநத்தம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் பசு மாடு, புலி தாக்கி இறந்தது. அவருக்கு, அருளகம் பறவை நல அமைப்பு, கர்நாடகா பந்திப்பூர் மாரியம்மன் அறக்கட்டளை சார்பில், நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மசினகுடியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் தலைமை வகித்து பேசுகையில், ''கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் புலி தாக்கி மாடு இறந்தால், அங்கு செயல்பட்டு வரும் மாரியம்மன் அறக்கட்டளை சார்பில், உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கி வருகின்றனர். அத்திட்டத்தை தற்போது மசினகுடி பகுதியிலும் செயல்படுத்த துவங்கியுள்ளனர்,'' என்றார்.நிகழ்ச்சியில், ராஜனுக்கு, 5,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.ஊட்டி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், வனச்சரகர் காந்தன், மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE