ஊட்டி;'மாவட்ட முழுவதும் கிராமப்புறங்களில், 3,000 சோலை மரக்கன்று நடவு செய்யப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டியில், சர்வதேச மலைகள் தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: இம்மாவட்டத்தில் ஆரோக்கியமான சுற்று சூழல், உயிர் சூழல் மண்டலத்திற்கு அத்தியாவசிய என்பதை உணர்த்துகின்ற வகையில், பிளாஸ்டிக், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இயற்கை விவசாய பணியும் துரித கதியில் நடந்து வருகிறது.இந்நிலையில், சர்வதேச மலைகள் தினத்தையொட்டி மாவட்ட முழுவதும் கிராம ஊராட்சி பகுதிகளில், 3,000 மரக்கன்று நடவு செய்து, பசுமையை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து மரக்கன்று நடவு செய்யும் பணியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள உள்ளனர்.இந்த முயற்சிக்கு மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தன்னார்வலர்களும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE