தமிழக முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. 'இந்த ஆட்சி நான்கு நாள் கூட தாங்காது' என்றவர்கள், வாயடைத்து போய் விட்டனர். பல இக்கட்டான சூழ்நிலைகளை, முதல்வர் மிகவும் சாதுர்யமாக எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
'ஆம், அனைவருக்கும் இதில் ஆச்சரியம் தான்...' என, ஒப்புக் கொள்ளத் தோன்றும் வகையில், தமிழக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு:

முதல்வரை தொடர்ந்து அவதுாறாக பேசினால், பார்த்து கொண்டிருக்க மாட்டோம்; நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை, தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ஜோக்கரா இல்லை அவர்கள் ஜோக்கரா என்பது தேர்தலில் தெரிய வரும்.- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
'முன்பு முதல்வரை தரக்குறைவாக, தி.மு.க.,வினர் விமர்சித்த போதெல்லாம் சும்மா இருந்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் இப்போது வெகுண்டெழுவது ஏன் என தெரியவில்லையே...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம், தி.மு.க., தன் முந்தைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை மீறியுள்ளது. இது, அந்த கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
'அது வேறு வாய்... இது வேற வாய்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் அறிக்கை.
'இந்த கட்சிகள் தான், சில ஆண்டுகளுக்கு முன், அந்த சட்டங்கள் வேண்டும் என்றன...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி: பா.ஜ.,வை தவிர மற்ற எல்லா கட்சிகளும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கூறுகின்றன. இது, ஜனநாயக நாடா அல்லது மோடியின் சர்வாதிகாரம் நடக்கிறதா... மோடியின் சர்வாதிகாரத்துக்கு, இந்த நாட்டில் இடமில்லை.
'அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 60 இடங்கள் கொடுக்கப்படும் என்ற தகவல் சரியில்லை. கட்சிக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தான், இடங்கள் ஒதுக்கப்படும்.- பொன்னையன்.
அப்படியானால், தமிழகத்தில், பா.ஜ., தான் இப்போது செல்வாக்கான கட்சியாக இருக்கிறது; ஏராளமான பிரபலங்கள் அந்த கட்சியில் உள்ளனர். அந்த கட்சிக்கு அதிக இடங்களை கொடுப்பீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., அமைப்புச் செயலர் பொன்னையன் பேட்டி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE