ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 40 போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள மைக், போலீசாரின் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை பராமரிப்பதோடு, பழுதாகாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு இப்பிரிவுக்கு உள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், சென்னையில் இருந்து நீதிமன்றம் மற்றும் போலீஸ் தலைமையகத்தில் இருந்து வரும் தகவல்களை பெறும் பிரிவுக்கு, ஒரு இன்ஸ்பெக்டரும் உள்ளனர். தகவல் தொழில் நுட்ப பராமரிப்பு பிரிவு இன்ஸ்., சேகர், பாலியல் புகாரால், கடந்த அக்டோபர் மாத இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது வரை, இன்ஸ்., நியமிக்கப்படாமல், சென்னை தகவல்களை பெறும் இன்ஸ்பெக்டரிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தாமதம் செய்யாமல், இன்ஸ்பெக்டரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE