ஈரோடு: ஈரோடு ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தில், 70 ஆயிரம் மரக்கன்று, செடிகள் நட்டு பராமரிக்கின்றனர். ஈரோடு ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான, எலக்ட்ரிக் ரயில் பணிமனை வளாகத்தில், காலியாக உள்ள, 11 ஏக்கர் நிலம், சுற்றுப்பகுதி வளாகத்தில், வேம்பு, புங்கன், நாவல், அரசமரம், பழச்செடி, அழகு செடிகள் என, 40 வகை மரம், செடிகள் என, 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கவி கூறியதாவது: கடந்த ஓராண்டில், தொண்டு நிறுவன உதவியுடன், 'மியாவாக்கி' முறையில், குறைந்த நிலத்தில் அதிக மரச்செடி, பிற செடிகளை, அடர்த்தியாக நட்டு, சிறிய காடுகளை உருவாக்கி, மழை மேகங்களை குளிர்விக்கும் முயற்சியாகும். இதை, தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE