பொது செய்தி

தமிழ்நாடு

பெரும்பள்ளம் ஓடையில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஈரோடு: பெரும்பள்ளம் ஓடையில், ஆக்கிரமிப்பு வீடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். ஈரோடு மரப்பாலம், குயவன் திட்டு, ஜீவானந்தம் சாலையின் குறுக்கே செல்லும், பெரும்பள்ள ஓடை பகுதியில், 74 குடியிருப்புகள் உள்ளன. மழை காலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்வதால், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய, மாநகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ்

ஈரோடு: பெரும்பள்ளம் ஓடையில், ஆக்கிரமிப்பு வீடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். ஈரோடு மரப்பாலம், குயவன் திட்டு, ஜீவானந்தம் சாலையின் குறுக்கே செல்லும், பெரும்பள்ள ஓடை பகுதியில், 74 குடியிருப்புகள் உள்ளன. மழை காலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்வதால், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய, மாநகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியது. ஆனால், குடியிருப்புவாசிகள் காலி செய்யவில்லை. இந்நிலையில், மாநகராட்சி நான்காம் மண்டல உதவி கமிஷனர் சண்முக வடிவு தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி ஊழியர்கள், ஓடைக்குள் காலியாக இருந்த, எட்டு வீடுகளை முதல் கட்டமாக நேற்று இடித்து அகற்றினர். மீதி குடியிருப்பு வாசிகள், அவகாசம் கேட்டதால், 10 நாட்கள் அவகாசம் அளித்து விட்டு அதிகாரிகள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X