3 மாதமாக பிரிவு வாழ்க்கை: கணவன் வீட்டு முன் மகனுடன் பெண் தர்ணா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதமாக பிரிவு வாழ்க்கை: கணவன் வீட்டு முன் மகனுடன் பெண் தர்ணா

Added : டிச 12, 2020
Share
கோபி: எலத்தூரில் கணவன் வீட்டு முன், மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். நம்பியூர் தாலுகா எலத்தூரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 45; திருப்பூரில் தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிகிறார். இவரின் மனைவி சுபா, 35; தம்பதியருக்கு, 12 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் தம்பதியர், கடந்த மூன்று மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன், கணவருக்கு தொடர்பு

கோபி: எலத்தூரில் கணவன் வீட்டு முன், மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். நம்பியூர் தாலுகா எலத்தூரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 45; திருப்பூரில் தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிகிறார். இவரின் மனைவி சுபா, 35; தம்பதியருக்கு, 12 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் தம்பதியர், கடந்த மூன்று மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன், கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ்வதாகவும் கூறி மகனுடன், எலத்தூரில் உள்ள ஸ்ரீதர் வீட்டு முன் நேற்று காலை, சுபா தர்ணாவில் ஈடுபட்டார். கடத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இதனால் எலத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X