பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியாரின் எண்ணம் எல்லையற்றது: பல்கலை துணைவேந்தர் பெருமிதம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஈரோடு: பாரதியாரின் எண்ணம் எல்லையற்றது என்று, பல்கலை துணைவேந்தர் பெருமிதம் தெரிவித்தார்.மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோட்டில் நடந்த பாரதி விழாவில், தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் உருவப்படத்தை திறந்து வைத்து, சென்னை இளைஞர் இசைக்குழு கலைத்துறை இயக்குனர் டி.ராமசந்திரன் பேசியதாவது: இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனுக்கு, பாரதி

ஈரோடு: பாரதியாரின் எண்ணம் எல்லையற்றது என்று, பல்கலை துணைவேந்தர் பெருமிதம் தெரிவித்தார்.


மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோட்டில் நடந்த பாரதி விழாவில், தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் உருவப்படத்தை திறந்து வைத்து, சென்னை இளைஞர் இசைக்குழு கலைத்துறை இயக்குனர் டி.ராமசந்திரன் பேசியதாவது: இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனுக்கு, பாரதி மீது இருந்த பக்தியால், அவரது பாடல்களை சேர்ந்திசைக்குழு மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இக்குழு மூலம் தேச பக்தி, மனித நேயம், சமூக நீதியை கொண்டு சேர்க்கிறோம். பாரதி எழுதிய பாடல்களை, இசையமைத்து பாடும் முன், அவர் எழுதிய வரிகளை உள்வாங்கி, அவர் என்ன மனநிலையில் எழுதினார் என்பதை நினைத்தே, இசை வடிவம் சேர்த்தார். அதனால்தான் இன்னும், பாரதியின் பாடல், அவரது இசை சேர்ப்பால் மக்களிடம் உணர்ச்சியுடன் பாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இசைக்கவி ரமணனுக்கு, 'பாரதி விருதும்', 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழி வழங்கி, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் பேசியதாவது: பாரதியை பல்வேறு கோணங்களில் உணர முடியும். அதில், அறிவியல் பார்வையில் பாரதி என பார்த்தால், பன்முகத்துடன் காணப்படுகிறார். நியூட்டன், ஐன்ஸ்டீன், கணித மேதை ராமானுஜம் போன்றோர், பல்வேறு சமன்பாட்டை கண்டறிந்தனர். இவர்கள் மிகப்பெரிய கல்வி, வாய்ப்புக்களை பெற்றவர்கள் அல்ல. அவர்களது கண்டுபிடிப்பு பல காலம் விவாதிக்கப்பட்டாலும், இன்று வரை, அதே நிலையில் கண்டுபிடிப்பு தொடர்கிறது. அதுபோல, பாரதியார், அவ்வையார் போன்றோர், உலக அறிவை எவ்வாறு பெற்றார்கள் என்பது வியப்பானதாகவே உள்ளது. ஒரு அணுவை பிளந்து, ஏழு கடல் புகுத்தி, என அணுவை அறியாத காலத்தில் அவ்வையார் கூறியது வியப்பானதுதானே. அதுபோல, பாரதியும் குழந்தைகள் முதல் தேச பற்று, உணர்வுகள் வரை பலவற்றை கூறியுள்ளார். அவை இன்றும் மாறாததாகவே காணப்படுகிறது. விஞ்ஞானத்துக்கு, பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், பாரதியின் எண்ணம் எல்லையற்றது. அதனால்தான், இன்றைய நிலைகளை, அப்போதே உணர்ந்து பாடி, எல்லா காலத்துக்கும் ஏற்றதாக நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இசைக்கவி ரமணன் ஏற்புரையாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X