பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் உலா

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஈரோடு: பொங்கல் விழா நிறைவு நாளான நேற்று, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், சிம்ம வாகனத்தில், கோவில் உலா வந்தார். ஈரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு திருவிழா, கொரோனா வைரசால், தீ மிதி விழாவில், பூசாரிகள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பொங்கல் விழா நிறைவு நாளான நேற்று,

ஈரோடு: பொங்கல் விழா நிறைவு நாளான நேற்று, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், சிம்ம வாகனத்தில், கோவில் உலா வந்தார். ஈரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு திருவிழா, கொரோனா வைரசால், தீ மிதி விழாவில், பூசாரிகள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பொங்கல் விழா நிறைவு நாளான நேற்று, உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவில் முன் சப்பரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். அதை தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளால், கோவிலை மட்டும் மூன்று முறை வலம் வந்து பின் நிலை சேர்ந்தார். இதில் கோவில் பணியாளர்கள், பூசாரிகள், விழா கமிட்டியார் மட்டுமே பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X